ஞாயிறு, 15 மே, 2011

மண்ணும் மண்வளமும் பொன்

"அல்லையூர்!" மண்ணும் மண்வளமும் பொன்னாய் திகழ்ந்த இனிய நல் பூமி எம் தாய் நிலம். கண்டோரை கண்ணுற வைக்கும் மண் வளம், எப்போதும் தலை வணங்கா பனைமரம், தென்னைமரம் என எல்லாமே கண்காணா காட்சிகள். வயல் வெளிகள், புல்தரைகள், பரந்து விரிந்துள்ள பரவைக்கடல், இருபுறமும் இசைபாடி தாலாட்டும் கடல்க்கரைகள் அருள் பொழிய அமைந்திருக்கும் ஆலயங்கள், மண்ணோடு மகிழ்ந்துறவாடும் தோட்டங்கள் விளையாட இதமான மணல்மேடுகள் என எல்லாமே இதமான பொன்னாடு எம்பூமியே.